திங்கள், 12 செப்டம்பர், 2011

அக்டோபர் 20ம் தேதி பெங்களூர் கோர்ட்டில் ஜெயலலிதா ஆஜராக உத்தரவு பதிவு செய்த நாள் : 9/13/2011 0:18:32


அக்டோபர் 20ம் தேதி பெங்களூர் கோர்ட்டில் ஜெயலலிதா ஆஜராக உத்தரவு

புதுடெல்லி : சொத்து குவிப்பு வழக்கின் விசாரணைக்காக பெங்களூர் தனி நீதிமன்றத்தில் ஜெயலலிதா அக்டோபர் 20ம் தேதி ஆஜராக வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. முதல்வர் ஜெயலலிதா, கடந்த 1991&96ம் ஆண்டில் முதன்முறை முதல்வராக இருந்த போது, வருமானத்துக்கு அதிகமாக ரூ.66 கோடி சொத்து குவித்ததாக குற்றம்சாட்டப்பட்டது. இது தொடர்பாக, லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதில், ஜெயலலிதாவுடன் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் மீதும் குற்றம்சாட்டப்பட்டது. 

இந்த வழக்கு பெங்களூர் தனி நீதிமன்ற விசாரணையில் உள்ளது. வழக்கில் நீதிமன்றம் எழுப்பும் கேள்விகளுக்கு குற்றம்சாட்டப்பட்டவர்கள் நேரில் ஆஜராகி பதிலளிக்க வேண்டும். இதற்காக ஆஜராகுமாறு ஜெயலலிதாவுக்கு நீதிமன்றம் சம்மன் அனுப்பியது. ஆனால், ஜெயலலிதா ஆஜராகவில்லை. பாதுகாப்பு காரணங்களால் நீதிமன்றத்தில் ஆஜராக தனக்கு விலக்கு அளித்து, எழுத்து மூலம் வாக்குமூலம் அளிக்க அனுமதிக்க வேண்டும் அல்லது வீடியோ கான்பரன்ஸ் மூலம் கேள்வி&பதிலை பதிவு செய்ய வேண்டும் என்று கோரி அவர் மனு தாக்கல் செய்தார். இதை தனி நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. 

இதை எதிர்த்து ஜெயலலிதா சார்பில், உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இம்மனுவை நீதிபதிகள் தல்வீர் பண்டாரி, தீபக் வர்மா ஆகியோர் கடந்த 5ம் தேதி விசாரித்தனர். தனி நீதிமன்றத்தில் ஜெயலலிதா கண்டிப்பாக ஆஜராக வேண்டுமென அப்போது உத்தரவிட்டனர். இந்நிலையில், இவ்வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. ஜெயலலிதாவின் வக்கீல் ஹரீஷ் சால்வே கூறுகையில், ‘தனி நீதிமன்றத்தில் ஆஜராக ஜெயலலிதா தயாராக உள்ளார். பாதுகாப்பு கருதி, வேறொரு கட்டிடத்தில் விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்’ என்று கோரினார்.

இதை கேட்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு:  பெங்களூர் தனி நீதிமன்றத்தில் அக்டோபர் 20ம் தேதி, ஜெயலலிதா ஆஜராக வேண்டும். பாதுகாப்பு பிரச்னை காரணமாக, வேறொரு கட்டிடத்தில் விசாரிக்க வேண்டுமென்ற கோரிக்கையை தனி நீதிமன்ற நீதிபதி பரிசீலித்து முடிவெடுப்பார். ஜெயலலிதாவிடம் ஒரே நாளில் விசாரித்து முடிக்க வேண்டும். அவர் ஆஜராகும் போது கர்நாடக அரசு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளனர்.
பதிவு செய்த நாள் : 

சனி, 10 செப்டம்பர், 2011

தாய், தந்தைஇன் பேச்சை கேட்காத பிள்ளைகளுக்கு ??????

தாய் – தந்தையரிடம் மிக கண்ணியமான முறையில் நடந்து கொள்ளுங்கள். பெற்றோரில் ஒருவரோ இருவருமோ முதுமை அடைந்துவிட்ட நிலையில் உம்மிடம் இருந்தால் அவர்களை ‘சீ’ என்றுகூடக் கூராதீர். மேலும் அவர்களைக் கடிந்து பேசாதீர். மாறாக அவர்களிடம் கண்ணியமாகப் பேசுவீராக ( திருக்குர் ஆன் 17:23 ). அபூபக்கர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்க, பைஹகியில் பதிவாகியுள்ள ஆதாரப்பூர்வமான நபிவழிச்செய்தி: ‘ஒவ்வொரு குற்றத்திற்கான த...ண்டனையும் மறுமையில் வழங்கப்படுவதுதான் இறைவிதி. ஆனால் பெற்றோருக்கு நோவினை செய்தவன் அதற்கான பிரதிபலனை இவ்வுலகிலேயே கண்கூடாகக் கண்டபின்பே இறப்பான். (நவூதுபில்லாஹ்) ‘தாயின் காலடியில் சொர்க்கம் இருக்கிறது” என்று சொன்ன மார்க்கம் இஸ்லாம் மட்டுமே என்பதை மறந்து விட வேண்டாம். நாம் அணைவரும் பெற்றோரைப் பேணக்கூடியவர்களாகத் திகழ எல்லாம் வல்ல அல்லாஹ் நல்லருள் புரிவானாக, ஆமீன்.

செவ்வாய், 6 செப்டம்பர், 2011

எனக்கு ரூ.51 கோடிக்கு சொத்துக்கள் உள்ளன: முதல்வர் அறிவிப்பு

சென்னை:""நான் எந்த புதிய சொத்தும் வாங்கவில்லை, எனக்கு, 51 கோடி ரூபாய்க்கு சொத்துக்கள் உள்ளன,'' என, சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.

சட்டசபையில் கேள்வி நேரம் முடிந்ததும், இந்திய குடியரசு கட்சி உறுப்பினர் செ.கு.தமிழரசன் பேசும்போது, "வஞ்சகம், போலி நிறைந்த அரசியல் உலகில் நம்பகத்தன்மைக்கு இலக்கணமாக முதல்வர் ஜெயலலிதா விளங்குகிறார். மனசாட்சியை தவிர வேறு எதற்கும் அவர் அஞ்சமாட்டார். அவர் சொத்துக்கணக்கு வெளியிடவில்லை என, ஒரு ஆங்கில பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. இதற்கு முதல்வர் விளக்கம் தருவாரா?' என, கேட்டார்.


இதற்கு முதல்வர் ஜெயலலிதா அளித்த பதில்:பெரிய ரகசியத்தை கண்டுபிடித்தது போல, அந்த ஆங்கிலப் பத்திரிகை அப்படி ஒரு செய்தியை வெளியிட்டுள்ளது. என் சொத்து விவரத்தில் எந்த ரகசியமும் இல்லை; ஒளிவுமறைவும் இல்லை. இந்திய தேர்தல் ஆணையத்தின் ஒரு விதியின் படி, சட்டசபை, லோக்சபா, ராஜ்யசபா பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்கள், வேட்பு மனுவை தாக்கல் செய்யும் போது, தங்களது சொத்துக்களின் விவரங்கள் பற்றி தெரிவிக்க வேண்டும்.அந்த அடிப்படையில், கடந்த ஐந்து மாதங்களுக்கு முன் நடந்த தேர்தலில், ஸ்ரீரங்கம் தொகுதியில் நான் போட்டியிட்டேன். அப்போது என் சொத்துக்களின் பட்டியலை வேட்புமனுவுடன் தாக்கல் செய்துள்ளேன். என் சொத்து விவரத்தை அப்போதே பத்திரிகைகள் வெளியிட்டு விட்டன.


ஸ்ரீரங்கம் தொகுதியில் நான் போட்டியிட்ட போது, அசையும் சொத்து, 13 கோடியே, 3 லட்சத்து, 27 ஆயிரத்து, 979 ரூபாய். அசையா சொத்து, 38 கோடியே, 37 லட்சத்து, 40 ஆயிரம் ரூபாய். ஆக மொத்தம், 51 கோடியே, 40 லட்சத்து, 67 ஆயிரத்து, 979 ரூபாய்.சட்டசபை தேர்தல் முடிந்து மூன்று மாதம் தான் ஆகியுள்ளது. இந்த மூன்று மாதத்தில் நான் எந்த புதிய சொத்தும் வாங்கவில்லை. ஏற்கனவே சொத்து விவரத்தை வெளியிட்டுள்ளேன். எனவே, மீண்டும் வெளியிட வேண்டிய அவசியம் இல்லை.இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார்.


வியாழன், 4 ஆகஸ்ட், 2011

தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் வீரர் வெய்ன் பர்னெல் இஸ்லாத்தை தழுவினார்


தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் வீரர் வெய்ன் பர்னெல் இஸ்லாத்தை தழுவினா


ஜோஹன்ஸ்பெர்க் :
 தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட்டின் இளம் வேகப்பந்து வீச்சாளர் வெய்ன் பர்னெல் இஸ்லாத்தை ஏற்று கொண்டுள்ளார். இன்று 22ம் ஆண்டை அடையும் அவர் இஸ்லாத்தை பற்றிய சில கால ஆராய்ச்சிக்கு பிறகு இம்முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது.
 

 இது தொடர்பாக பர்னெல் வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாண்டு ஜனவரி மாதமே தான் இஸ்லாத்தை ஏற்று கொண்டதாகவும் தன் பெயரை வலீத் என மாற்றும் எண்ணமுள்ளதாகவும் தெரிவித்தார். தற்சமயம் வரை தன் பெயரான வெய்ன் தில்லன் பர்னலை மாற்றவில்லை என்றும் எதிர்காலத்தில் புதிதாய் பிறந்த மகன் என பொருள்படும் வலீத் என்ற பெயரை வைக்க நினைப்பதாகவும் தெரிவித்தார்.  
மேலும் அவ்வறிக்கையில் தான் முதல் முறையாக ரமலான் மாதத்தை அடைய இருப்பதால் தான் முதன் முறையாக நோன்பு இருப்பதை குறித்து மிக சந்தோஷமாக இருப்பதாகவும் தெரிவித்தார். தென் ஆப்பிரிக்க மக்களும் ஊடகங்களும் தன் கிரிக்கெட் ஆட்டத்தில் காட்டும் ஆர்வத்தை மதிக்கும் அதே வேளையில் எந்நம்பிக்கையை ஏற்பது என்பது தனது தனிப்பட்ட உரிமை என்றும் கூறியுள்ள அவர் அதை மதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

   


தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் மேலாளர் முஹம்மது மூஸாஜீ பர்னெல் இஸ்லாத்தை ஏற்று கொள்வது அவரின் தனிப்பட்ட விஷயம் என்றும் இவ்விஷயத்தில் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட்டின் முஸ்லீம் வீர்ர்கள் ஹாஷிம் அம்லா மற்றும் இம்ரான் தாஹிர் ஆகியோர் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்றார்.


இது குறித்து கருத்து தெரிவித்துள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரர்கள் பர்னெல் இஸ்லாத்தில் தீவிரமாக உள்ளதாகவும் சமீபத்திய ஐ.பி.எல் போட்டியிலிருந்து ஒரு சொட்டு மதுவும் அருந்தவில்லை என்றும் தெரிவித்தனர். இதில் அம்லாவின் பங்கு ஏதுமில்லை என்றாலும் ஹாஷிம் அம்லா மிக கட்டுபாட்டுடனும் தன் மதத்தை பின்பற்றுவதில் காட்டும் உறுதியும் அனைவரையும் ஈர்த்துள்ளது என்றனர். ஹாஷிம் அம்லா இஸ்லாத்தின் ரோல் மாடலாக விளங்குவதாகவும் தெரிவிக்கின்றனர்.
மேலும் மது பரிமாறப்படும் கேளிக்கைகளில் பங்கேற்க மறுப்பது, சுற்றுபயணத்தில் கூட தன் தொழுகைகளில் உறுதியாய் இருத்தல், தென் ஆப்பிரிக்க அணியினரின் ஸ்பான்ஸரான பீர் நிறுவனத்தின் லோகோ பொறிக்கப்பட்ட ஆடையை அணிய மறுப்பது போன்றவைகளின் மூலம் அவரை அறியாமலேயே ஹாஷிம் அம்லா பிறர் இஸ்லாத்தின் மீது நல்லெண்ணம் தோன்ற காரணமாக இருக்கின்றனர் என்றனர். 2006 ஆம் ஆண்டு யூசுப் யோஹன்னவாக இருந்து இஸ்லாத்திற்கு மாறிய முஹம்மது யூசுப்பை தொடர்ந்து இஸ்லாத்தை ஏற்று கொண்ட இரண்டாவது கிரிக்கெட் வீர்ர் பர்னெல் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி: இந்நேரம்.காம்
 

ஈமான் கொண்டவர்களே! ஜுமுஆ உடைய நாளில் தொழுகைக்காக

   يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِذَا نُودِيَ لِلصَّلَاةِ مِن يَوْمِ الْجُمُعَةِ فَاسْعَوْا إِلَىٰ ذِكْرِ اللَّـهِ وَذَرُوا الْبَيْعَ ۚ ذَٰلِكُمْ خَيْرٌ لَّكُمْ إِن كُنتُمْ تَعْلَمُونَ         ஈமான்    கொண்டவர்களே! ஜுமுஆ உடைய நாளில் தொழுகைக்காக நீங்கள் அழைக்கப்பட்டால், வியாபாரத்தை விட்டுவிட்டு, அல்லாஹ்வைத் தியானிக்க (பள்ளிக்கு) விரைந்து செல்லுங்கள் - நீங்கள் அறிபவர்களாக இருப்பின் இதுவே உங்களுக்கு மிக மேலான நன்மையுடையதாகும்.    فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا مِن فَضْلِ اللَّـهِ وَاذْكُرُوا اللَّـهَ كَثِيرًا لَّعَلَّكُمْ تُفْلِحُونَ பின்னர், (ஜுமுஆ) தொழுகை நிறைவேற்றப்பட்டு விட்டதும், (பள்ளியிலிருந்து வெளிப்பட்டு) பூமியில் பரவிச் சென்று அல்லாஹ்வுடைய அருளைத் தேடிக் கொள்ளுங்கள், அன்றியும், நீங்கள் வெற்றியடையும் பொருட்டு, அல்லாஹ்வை அதிகமதிகம் தியானம் செய்யுங்கள்.

ஈமான் கொண்டவர்களே! ஜுமுஆ உடைய நாளில் தொழுகைக்காக

ஈமான் கொண்டவர்களே! ஜுமுஆ உடைய நாளில் தொழுகைக்காக

திங்கள், 1 ஆகஸ்ட், 2011

பொய் வழக்கு போடும் தமிழக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் லட்சம் திமுகவினர் கைது|Dinakaran No.1 Tamil Daily News Paper - Tamil News Paper | Tamil Latest News | India News | World News | Breaking News | Latest Headlines

பொய் வழக்கு போடும் தமிழக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் லட்சம் திமுகவினர் கைது|Dinakaran No.1 Tamil Daily News Paper - Tamil News Paper | Tamil Latest News | India News | World News | Breaking News | Latest Headlines

"ஒரு நாள் வரும், அன்று நீ குளிக்க மாட்டாய், உன்னை குளிப்பாட்டுவார்கள்

"ஒரு நாள் வரும், அன்று நீ குளிக்க மாட்டாய், உன்னை குளிப்பாட்டுவார்கள்

சனி, 30 ஜூலை, 2011

அம்மையாரின் அத்து மீறல் பலி வாங்கும் படலம் தொடங்கியது முன்னால் துணை முதல்வர் ஸ்டாலின் கைது


மிக்சி, கிரைண்டர், லேப்டாப் இலவசங்களை எதிர்த்து வழக்கு புதிய நெறிமுறை வகுக்க முடிவு|Dinakaran No.1 Tamil Daily News Paper - Tamil News Paper | Tamil Latest News | India News | World News | Breaking News | Latest Headlines

மிக்சி, கிரைண்டர், லேப்டாப் இலவசங்களை எதிர்த்து வழக்கு புதிய நெறிமுறை வகுக்க முடிவு|Dinakaran No.1 Tamil Daily News Paper - Tamil News Paper | Tamil Latest News | India News | World News | Breaking News | Latest Headlines

வியாழன், 28 ஜூலை, 2011

நபி தோழர்கள் நமக்கு உதாரணம்

4/10 - நபித்தோழர்கள் நமக்கு உதாரணம் - Mufti A.Omar Shereef Kasim

munnal raanuva veerar nilamai


அஸ்ஸலாமு அலைக்கும்!

எங்களின் வலைப்பூவுக்கு வருகை தரும் அனைவரையும் வரவேற்கிறோம். ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமூகங்களை அனைத்துத் துறைகளிலும் வலிமைப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு துவக்கப்பட்டதே பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா. அனைத்து ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமூகங்களை கைகோர்த்து தொலைநோக்குப் பார்வையுடன் ஜனநாயகக் கோட்பாடுகளுக்குட்பட்டு ஒரு சமூக, பொருளாதார, அரசியல் மாற்றத்திற்காக போராடிக்கொண்டிருக்கும் மக்கள் பேரியக்கமே பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா. பாப்புலர் ஃப்ரண்ட் கல்வி, பொருளாதாரம், அரசியல், சமூகச் சேவைகள், சமூக மேம்பாடு, சமுதாய விழிப்புணர்வு, மக்கள் போராட்டம், மனித உரிமை தளம், சட்டக்களம், ஊடகம் என அனைத்துத் தளங்களையும் தன்னகத்தே கொண்டு செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் 2001ல் மனித நீதிப் பாசறை (MNP) யாகப் பிறந்து, 2009ல் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா எனப் பரிணமித்து இன்று தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, கோவா, மணிப்பூர், மேற்கு வங்காளம், ராஜஸ்தான், மஹாராஷ்டிரா என 9 மாநிலங்களில் செயல்படும் ஒரு தேசிய இயக்கமாக வளர்ச்சியடைந்துள்ளது.

அடுத்து வருவது

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்தவிருக்கும் அடுத்த நிகழ்ச்சி

Running Text

புதிய பாதை! புதிய இந்தியா!!

flash news!

உயர்கல்வி பெறுவதற்காக ஏழை எளிய மக்களுக்கு வட்டியில்லா கடன் உதவி வழங்குவதற்கு பாப்புலர் ஃப்ரண்ட் இந்த முறை ஏற்பாடு செய்துள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் ஒவ்வொரு பகுதிகளிலும் விநியோகிக்கப்படும், மண்ணடியில் இயங்கி வரும் மாநில தலமையகத்திலும் விண்ணப்பங்கள் கிடைக்கும். விண்ணப்பங்கள் அனைத்தும் ஆகஸ்ட்-1ம் தேதிக்குள் வந்து சேரவேண்டும். தொடர்புக்கு : 044-64611961

விளம்பரம் பகுதி

விளம்பரத் தொடர்புக்கு: pearlahamed@yahoo.co.in

25 ஜூலை, 2011

இந்தியா அரசாங்கமே தீவிரவாத இயக்கமான ஆர்.எஸ்.எஸ் - ஐ உடனே தடை செய்


Quantcast
இந்தியாவில் எங்கு குண்டு வெடித்தாலும்  அதற்க்கு காரணம் இந்தியன் முஜாகிதீன் என்றும் .பாகிஸ்தான் தீவிரவாதிகள் என்றும் ,ஆந்திர  முஜாகிதீன்கள் என்றும் ,புதிய புதிய முஜாகிதீன்களை உருவாக்கும் இந்தியாவின் முட்டாள் உளவு துறைக்கும் இந்த காங்கிரஸ் அரசாங்கத்திற்கும் ஒரு வேண்டுகோள்
இந்தியாவில் நடைபெற்ற அணைத்து குண்டுவெடிப்புகளுக்கும் காரணம் தீவிரவாத இயக்கமான R.S.S  தான் என்பதற்கு ஏராளமான காரணங்களை  திட்டவட்டமாக கூற  முடியும் அதில் முக்கியமானதாகவும்  ஆதரமாகவும் இருக்க கூடியது மாலகானில் பெண் தீவிரவாதி பிரக்யாத்சிங்கால் நடத்தப்பட்ட  குண்டு வெடிப்பு இன்னும் இந்தியாவில் நடைபெற்ற அநேக  குண்டு வெடிப்புக்கு காரணம் நாங்கள் தான் என்று வாக்குமூலம்  அளித்த அசிமானந்த ,ஹைதராபாத் குண்டுவெடிப்பு மட்டும் இன்றி குஜராத் கலவரம், பாபர் மஸ்ஜித்  இடிப்பு , மண்டைகாடு கலவரம் இன்னும் சொல்லிக்கொண்டே போகும் அளவுக்கு இந்த R.S.S தீவிரவாதிகளால் இந்த இந்தியாவில் பல வன்முறைகள் கையாளப்பட்டுள்ளன .
மும்பை தாஜ் ஹோட்டலில் நடந்த குண்டு வெடிப்புக்கு பின்னணியில் நின்றது R.S.S தான் என்பதற்கு மிகப்பெரிய உதாரணம்  மாவீரன் கர்கறேயின் மரணம் .ஆக இதை போன்று இப்போது மும்பையில்  நடை பெற்ற  குண்டு வெடிப்புக்கு காரணம் R.S.S தான் என்று  திட்டவட்டமாக கூற முடியும்
இந்தியா அரசாங்கத்தால்  இரண்டுமுறை தடை செய்யப்பட்ட இந்த  R.S.S தீவிரவாத இயக்கம் மீண்டும் நிரந்தரமாக  தடை செய்ய பட வேண்டும்

0 விமர்சனங்கள்:


கருத்துரையிடுக



வலைப்பதிவு காப்பகம்

குறிப்பு: இது பாப்புலர் ஃப்ரண்டின் அதிகாரப்பூர்வ வலைப்பூ அல்ல! ஆசிரியர் அவர்களுக்கு தன் சொந்த கருத்துக்களை வெளியிட உரிமை உண்டு என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.